ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

சத்துணவும் டீச்சர் முட்டையும்...

சத்துணவும் டீச்சர் முட்டையும்... : நான் எங்க ஊரு பள்ளியில 8வது படிக்கும் வரை மதியம் சத்துணவு சாப்பிட்டேன். என்னோட சேர்ந்து என்னோட நண்பர்களும் சாப்பிடுவாங்க. எங்க பள்ளில நிறைய வேப்பமரம் இருக்கு. எண்ணிக்கைல பார்த்தா 200க்கு மேல இருக்கும். நாங்க எல்லாம் ஒரு கும்பலா ஏதாவது ஒரு வேப்பமரத்த சுத்தி உட்காந்து சாப்பிடுவோம். அந்த மாதிரி ஒரு நாள் சாப்டுகிட்டு இருந்தோம். அன்னைக்கு காலைல தான் மாத பரிட்சையோட விடைத்தாள் கொடுத்திருந்தாங்க. என்னோட ஒரு நண்பன் பெயர் மாரிமுத்து; படிப்பு அவனுக்கு நல்லா வராது. எல்லா பாடத்திலும் பெயில் ஆயின்ருந்தான்;ஆங்கிலத்துல அவன் மார்க் பத்து, ஆனா அவன் வகுப்புல சத்தமா பேசிக்கிட்டு இருந்ததால சுத்தமா பூஜ்யம் மார்க்னு போட்டுட்டாங்க எங்க ஆசிரியை. நாங்க சாப்டுகிட்டு இருந்த போது எங்க வகுப்பு ஆசிரியர் அங்க வந்தார். மாரிமுத்துவோட சாப்பாட்டு தட்ட பார்த்தார் அவன் தட்டுல ஒன்னுக்கு மூனு முட்டை இருந்தது. அவன் பக்கத்துல இருந்த ரெண்டு பசங்க முட்டைய வாங்கி வச்சிருந்தான். அதுனால எங்க சார் அவன பார்த்து ""முட்டை யார் போட்டாங்க? "ன்னு கேட்டார். மாரிமுத்து கேள்விய தப்பா புரிஞ்சிக்கிட்டு ஆங்கில பாடத்துல ஆசிரியை போட்ட முட்டைதான் கேட்குரார்னு நெனச்சிக்கிட்டு "இங்கிலீஷ் டீச்சர் தான் போட்டாங்க"னு சொல்லிட்டான். "அவங்க முட்டைய நீ ஏன்டா நீ வாங்குன?"ன்னு அவர் கேட்டக அப்புறம் தான் அவருக்கு புரிஞ்சது விஷயம். அதுக்கப்புறம் என்ன ஒரே சிரிப்பு தான் எல்லோருக்கும். அன்னைக்கு தான் அவன் பள்ளி முழுதும் பிரபலம் ஆயிட்டான். அண்மையில் ஊருக்கு போயிருந்தேன் பல நன்பர்கள பார்த்தேன். சிலர் பொறியியல் கல்லூரி, சிலர் பாலிடெக்னிக், சிலர் பஞ்சுஆலை, சிலர் என்ன ஆனான்னு தெரியல ; அதுல ஒருத்தன் மாரிமுத்து . ஆனா அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்..