புதன், 7 மார்ச், 2012

கல்லூரியில் எனது முதல் நாள் அனுபவம்!

என் முதல் நாள் கல்லூரி அனுபவம் :
                         
       நான் வைஷ்ணவ கல்லூரியில்  தான் தற்போது படித்துவருகிறேன் . இது என் 2வது வருடம்  நான் அரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்தவன். ஆனால் நான் சேர்ந்த புதிதில் எனது கல்லூரியில் பேராசிரியர்கள் திட்டுவது மட்டும்தான் தமிழில் மீதம் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் என தெரிந்து கொண்டேன். ஆதலால், கல்லூரியில் முதல் நாள் என்னை பற்றி சுய அறிமுகம் செய்துகொள்ள ஆங்கிலத்தில் பேச நான் கற்றுக்கொண்டேன். மேலும் பகிடிவதை சித்தரவதையெல்லாம் கல்லூரில் உண்டு என நினைத்து பயந்துகொண்டே கல்லூரிக்கு சென்றேன்.
      
   அனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருந்தது. சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றனர். இதை பார்த்த எனக்கு ஒருவித உற்சாகம் மனதில் ஏற்பட்டது. இருந்தும்  எனது வகுப்பு மற்றும் சக மாணவர்கள் , மாணவிகள் பற்றிய எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாதவனாய் என் வகுப்பைக் கண்டுபிடித்து அதில் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அடுத்த என் எண்ணம் "நாம் மட்டும் தான் தமிழ் வழிக் பயின்றவனா இல்லை வேறு யாரேனும் தமிழ் வழி பயின்ற மாணவர்கள் உள்ளனரா?" என என் கண்கள் தேட ஆரம்பபித்தது. என் வகுப்பில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 50 . அதில் என்னைத்தவிர ஒருவன் மட்டும் தமிழ் வழிக் கல்வி பயின்றவன் மட்டுமே இருந்தான். அனைவரின் உடையும்,காலணிகளும் என்னை உடையையும்,செருப்பையும் விட தரத்திலும்,விலையிலும் உயர்வாகவே இருந்தது. என் குடும்ப நிலையை ஒத்த மாணவர்கள் 5 பேர் என்னுடன் படித்துக்கொண்டு உள்ளனர்.
   
     அடுத்ததாக என் ஆசிரியர்கள் பற்றியும் எனது பாட திட்டங்கள் பற்றியும் நினைத்தவாறு இருந்தேன். குறிப்பாக நான் எனது ஆங்கில ஆசிரியர் பற்றி எனக்கு ஒன்றை நானே உருவகம் செய்துகொண்டேன். நான் நினைத்தது போல ஆங்கில ஆசிரியை அவர்கள் இருந்தார். அவர் முதலில் தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டார். பின்பு மாணவர்கள் ஒவ்வொருவரையும் தங்களை பற்றி கூறுமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாறே எங்களின் அறிமுகம் முடிந்தது. அதன் பின்பு கணித ஆசிரியர், c language, தமிழ் ஆசிரியர் என வரிசையாக எங்கள் ஆசிரியர்கள் அனைவரையும் கண்டோம். அதில் எனக்கு தமிழ் ஆசிரியர் அவர்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


  கொஞ்சம் மன இறுக்கம், கொஞ்சம் பயம், கொஞ்சம் உற்சாகம் என என் முதல் நாள் கல்லூரி நாள் கழிந்தது.  

உண்மையான கடவுளும் மனிதனும்!

            கடவுளும் மனிதனும்! இதை நான் எழுதக் காரணம் கடவுளால் நாமும் , நம்மால்  கடவுளும் பரஸ்பரம் பாதிக்கப்பட்டுளோம். ஒரு வேளை அவர் கூகுளில் கணக்கு வைத்திருந்தால், நமக்கு முன்னரே அவர் எழுதி இருக்கலாம் என நினைக்கிறன்.
   
          நான் சிறு வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவன். பெண் பிள்ளைகள் போன்று வாராவாரம் செவ்வாய்,வெள்ளி என எனது ஊரில் உள்ள அன்னை சாரதாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபடுவேன். மேலும், பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலிலும் சென்று தரிசனம் செய்வேன். நான் 7ஆம் வகுப்பு வரை எனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை நகரத்துக்கு அருகில் உள்ள ராமலிங்க நகர் தான். தினசரி காலை பள்ளிக்கு செல்லும் முன்னர் எனது வீட்டில் கடவுளை வணங்கிவிட்டு தான் புறப்படுவேன். வெகு ஜென மக்கள் என்னவெல்லாம் இறைவனிடம் வேண்டுவர்களோ அதைத்தான் நானும் வேண்டுவேன்.அப்பொழுது என்னக்கு தெரியாது இறைவன் பாவப்பட்ட ஜென்மம் என்பது. பொதுவாக நான் எப்போதும் சாமி கும்பிடும் பொது அவரிடம் வேண்டுவது "சாமி எனக்கு நல்ல கல்வி செல்வத்தை கொடு,என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடு" என வேண்டுவேன். இது முடிந்தபின்னர் நவ கிரகங்கள் என அழைக்கப்படும் ஒன்பது நல்லவர்களையும் வேண்டுவேன். அதில் அந்த சனி பகவனை பற்றி கேள்விப்பட்டுள்ளேன் அவர் யாரையும் தொடக்குடதாம். அப்படி தொட்டால் பெரிய துன்பங்கள் எல்லாம் ஏற்படுமாம். அதனால் சனி பகவான் மீது மட்டும் ஒரு வித பயம் இருக்கும்.
  
        எனது வேண்டுதல் எல்லாம் பலித்ததா என்று கூட எனக்கு திறனாய்வு செய்யும் அளவுக்கு எனக்கு அப்போது விவரம் இல்லை. ஆனால் இப்போது எனது வேண்டுதலை நினைத்து பார்க்கும் போது இறைவனின் கஷ்டம் புரிகிறது.நம் அனைவரும் அறிந்ததே இன்று உலக மக்கள் தொகையின் எண்ணிக்கையும் , அதில் நமது நாட்டின் பங்களிப்பையும். இந்த விஞ்ஞான உலகில் சில மக்கள் இறைவன் இல்லை என்கின்றனர், ஆனால் அவ்வாறு சொல்பவர்களின் பெற்றோரோ "கடவுளே என் பிள்ளையைய் எப்படியாவது திருத்து" என பிள்ளை நம்பாத கடவுளிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைக்கும் படி வேண்டுகின்றனர்.
         
   நம்மில் அநேகர் இறைவனிடம் தனக்கானத்தைத் தான் வேண்டுகின்றனர். உண்மையில் இது தவறில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.இத்தனை காலம் கடவுள் நம் அனைவரின் வேண்டுதலை கேட்டுக்கேட்டு விரக்தி அடைந்து இருக்கவேண்டும்."என்னடா இந்த மனிதர்கள் ஒன்று நம்மிடம் அதைக்குடு ,இதைக்குடு என தொல்லை செய்கின்றனர் இன்னொருபக்கம் கடவுளே இல்லை என நம்மையே திட்டுகின்றனர்" என வருந்தி இருப்பார்.எனவே தான் இப்போது அவர் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்துவிட்டார் போலும். (கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் அல்லவா?)ஆனால் இந்த இடத்தில் கடவுள் மனிதனாய் மாறிவிடுகிறார். 


   நான் இப்போதெல்லாம் கடவுளிடம் ,"இந்த நாள் நன்றாக இருக்க வேண்டும் " என மட்டுமே வேண்டுகிறேன்.கடவுள் பற்றி நாம் பேசும்போதெல்லாம் நாம் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?இல்லையா? என விவாதிக்க தயங்குவதில்லை.
   நான் இங்கு ஒரு சிறுகதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
   
   ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக  அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்
வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

"
சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில்  செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்


திடீர் என    ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவு கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்
" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது 


எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "


அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது

அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது


உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"
  
    இது காலம் சென்ற தமிழ் ஆர்வலர் தென்கச்சிக் கோ. சுவாமிநாதன் அவர்கள் எழுதிய சிறுகதை ஆகும்.

 பண்டைய காலத்தில் நம் முன்னோர் கடவுளை ஒரு கருவியாக பயன்படுத்தி இருக்கவேண்டும். ஏனெனில், மக்கள் அக்காலத்தில் இறைவனுக்கு அஞ்சினர். எனவே அடிப்படை சமூக நெறிகள் காக்க இறைவன் என்ற அடையாளம் தெரியாதவர் பயன்பட்டிருப்பார். உதாரணமாக மேற்கண்ட கதையில் எப்படி இறைவன் தியானம் செய்ய ஒரு கர்வியை பயன்படுகிரானோ அது போல நம் அன்றாட வாழ்வியல் செயல்களில் அவன் நமக்காக பிறருக்கும் , பிறருக்காக நமக்கும் பயன்படுகிறான்.   


   வேறு சிலரோ மனிதன் என்ற கோணத்தில் தன்னை பிறரிடம் காண்கிறான் . அதனால் பிறரின் துன்பத்தை தன்னுடைய துன்பமாக எண்ணுகிறான், துடிக்கிறான், உதவுகிறான். அவனே மற்றோர் பார்வையில் இறைவனாகிறான். இங்கு ஒரு மனிதன் இறைவன் நிலையை அடைகிறான்.நானும் இறைவனாக விரும்புகிறேன். நீங்கள் கடவுளைபோன்ற மனிதனாக வாழ்வீர்களா? அல்லது மனிதனைப் போன்ற கடவுளாக வாழ்வீர்களா?