என் முதல் நாள் கல்லூரி அனுபவம் :
நான் வைஷ்ணவ கல்லூரியில் தான் தற்போது படித்துவருகிறேன் . இது என் 2வது வருடம் நான் அரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்தவன். ஆனால் நான் சேர்ந்த புதிதில் எனது கல்லூரியில் பேராசிரியர்கள் திட்டுவது மட்டும்தான் தமிழில் மீதம் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் என தெரிந்து கொண்டேன். ஆதலால், கல்லூரியில் முதல் நாள் என்னை பற்றி சுய அறிமுகம் செய்துகொள்ள ஆங்கிலத்தில் பேச நான் கற்றுக்கொண்டேன். மேலும் பகிடிவதை சித்தரவதையெல்லாம் கல்லூரில் உண்டு என நினைத்து பயந்துகொண்டே கல்லூரிக்கு சென்றேன்.
அனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருந்தது. சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றனர். இதை பார்த்த எனக்கு ஒருவித உற்சாகம் மனதில் ஏற்பட்டது. இருந்தும் எனது வகுப்பு மற்றும் சக மாணவர்கள் , மாணவிகள் பற்றிய எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாதவனாய் என் வகுப்பைக் கண்டுபிடித்து அதில் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அடுத்த என் எண்ணம் "நாம் மட்டும் தான் தமிழ் வழிக் பயின்றவனா இல்லை வேறு யாரேனும் தமிழ் வழி பயின்ற மாணவர்கள் உள்ளனரா?" என என் கண்கள் தேட ஆரம்பபித்தது. என் வகுப்பில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 50 . அதில் என்னைத்தவிர ஒருவன் மட்டும் தமிழ் வழிக் கல்வி பயின்றவன் மட்டுமே இருந்தான். அனைவரின் உடையும்,காலணிகளும் என்னை உடையையும்,செருப்பையும் விட தரத்திலும்,விலையிலும் உயர்வாகவே இருந்தது. என் குடும்ப நிலையை ஒத்த மாணவர்கள் 5 பேர் என்னுடன் படித்துக்கொண்டு உள்ளனர்.
அடுத்ததாக என் ஆசிரியர்கள் பற்றியும் எனது பாட திட்டங்கள் பற்றியும் நினைத்தவாறு இருந்தேன். குறிப்பாக நான் எனது ஆங்கில ஆசிரியர் பற்றி எனக்கு ஒன்றை நானே உருவகம் செய்துகொண்டேன். நான் நினைத்தது போல ஆங்கில ஆசிரியை அவர்கள் இருந்தார். அவர் முதலில் தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டார். பின்பு மாணவர்கள் ஒவ்வொருவரையும் தங்களை பற்றி கூறுமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாறே எங்களின் அறிமுகம் முடிந்தது. அதன் பின்பு கணித ஆசிரியர், c language, தமிழ் ஆசிரியர் என வரிசையாக எங்கள் ஆசிரியர்கள் அனைவரையும் கண்டோம். அதில் எனக்கு தமிழ் ஆசிரியர் அவர்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
கொஞ்சம் மன இறுக்கம், கொஞ்சம் பயம், கொஞ்சம் உற்சாகம் என என் முதல் நாள் கல்லூரி நாள் கழிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக