திங்கள், 24 டிசம்பர், 2012

இந்த வருடம்(2012) உலகம் உற்றுநோக்கிய மனிதர்கள்

இந்த வருடம்(2012) உலகம் உற்றுநோக்கிய மனிதர்கள் :

ஜூலியன் அஸ்ஸான்ஜே (julian Assange) - விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் பல அரசாங்கங்களின் முக்கிய ஆவணங்களை வெளியிட்டார் .




பாரக் ஒபாமா - 2ஆம் முறை அமெரிக்க அதிபரானார் .




ஆங் சான் ஸூ கி -மயான்மர் அரசால் நீண்ட வருட சிறை வாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்பட்டார் .



லிபிய நாட்டின் அதிபர் கடாபி உள்நாட்டு போராளிக் குழுவினரால் கொலை செய்யப்பட்டார்.




எகிப்து நாட்டின் அதிபர் முபாரக் மக்கள் போராட்டத்தால் வீழ்த்தப்பட்டார் .




மன்மோகன்சிங் - பிரபல டைம்ஸ் இதழ் இவரை செயல்பட இயலாதவர் என விமர்சித்தது .



மாயன் இனத்தார் - இவர்கள் நாட்காட்டி இந்த வருடத்துடன் முடிவதால் உலகம் அழியும் என்ற பீதி இவர்களின் வாழ்வியல் முறை , பண்பாட்டை உலகறியச் செய்தது .





சச்சின் டெண்டுல்கர் - டெஸ்ட் போட்டியில் 50வது சதம் கடந்தார். மேலும் தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.



அண்ணா ஹசாரே மற்றும் அவரின் குழு - உழலுக்கு எதிரான இயக்கம் என்ற ஒன்றை தொடங்கி தனது உண்ணா விரத போராட்டத்தால் மக்களிடம் எவ்வளவு விரைவில் செல்வாக்கு பெற்றனரோ அதே வேகத்தில் அவர்களின் வீழ்ச்சி இருந்தது .