வெள்ளி, 6 ஏப்ரல், 2012
மாநகர பேருந்து ஒட்டுனர்க்கும் ,தனியார் வாகன ஒட்டுனர்க்கும் இடையே நடந்த நீயா ?நானா? போட்டி
நேற்று இரவு என்னடைய வேலையை முடித்துக்கொண்டு 6.30 மணியளவில் காசி theater நிறுத்தத்தில் கோயம்பேடு செல்லும் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தேன். சில நிமிடங்கள் காத்திருப்புக்குப்பின் வந்த c70பேருந்தில் ஏறினேன். பச்சை போர்டு பேருந்து அது. உதயம் வரைக்கு நல்லாதான் போச்சு. அப்புறம்தான் ஆரம்பிச்சது அந்த மொக்க சீன். என்னன்னா அசோக் பில்லர் to வடபழனி signal வரைக்கு செம ட்ராபிக் பஸ் டிரைவர் பின்னாடி வந்த ஒரு தனியார் கம்பனி tempo traveller வண்டிய ஓரம் கட்றமாதிரி ஒட்னாறு. அவளோ தான் அந்த டிரைவர்க்கு வந்தது ஒரு கோபம் பாருங்க யாரு யார ஓரங்ககட்டுரதுனு ஒரு போட்டியே அந்த ட்ராபிக்ல நடந்தது. ரெண்டு பெரும் ஒருத்தனுக்கு ஒருத்தன் ஆங்கிலத்துல அவனுங்க ஏழு ஜென்மம் வரை இழுத்து திட்டிகிட்டானுங்க. வடபழனி சிக்னல் வரை இவங்க அக்கப்போர் தாங்கமுடியல.
எரியிற தீல எம்பது லிட்டர் பெட்ரோல் ஊத்துற மாதிரி பஸ்ல தொங்கிட்டு வந்த பசங்க வேற பஸ் டிரைவர துண்டிவிட சார் கியர் பாக்ஸ் மேல நயன்தாரா வந்து உக்காந்த மாதிரி ஓட்ட பஸ்ல இருந்த எல்லோரும் "ஏம்பா அவனோட உக்கு இந்த போட்டி பேசாம மெதுவாவே போப்பானு கத்த" ஒரே ரணகளம். கடைசில வடபழனி சிக்னல் கிட்ட tempo traveller ஓடிக்கிட்டு வந்த அந்த super hero நம்ம தல பஸ்ஸ அனச்சிவிட்டான். பஸ்சுக்கு ரைட் சைட்ல அந்த மெட்ரோ ரயில் தடுப்பு இந்தப்பக்கம் அந்த super hero வண்டி, பின்னாடி செம ட்ராபிக் பாபா படத்துல கடைசில ரஜினி எந்த பக்கம் போவார்னு மக்கள் எதிர்பாக்க அவர் கரெக்டா தப்பான சைடு போவார் அதே மாதிரி நம்ம டிரைவரும் போட்டார் ஒரு கியர் மிதிச்சார் அந்த அச்செலறேடர்அ அவளோதான் அந்த super hero வண்டியோட ஒரு சைடு நல்ல அடி பஸ்சுக்கு சைடு மிரர் அவுட் . நாங்களும் செம மூட் அவுட். அப்புறம் என்ன ரெண்டு super heroகும் செம அர்ச்சனை. போலீஸ் வந்தது ரெண்டு வண்டியும் ஓரமா போட்டு எங்கள சைடுல போட்டு அப்புறம் வேற பஸ்ஸ பிடிச்சி வீடு வந்து சேர்ந்தேன். உண்மைய சொல்லனும்னா அந்த பஸ் டிரைவர் மேலதான் தப்பு. சரி அந்த பஸ் டிரைவர் எப்படியோ தப்பிசிருவாறு ஆனா அந்த tempo traveller டிரைவர் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். இந்த மாதிரி வண்டி சேதாரம் ஆச்சின்னா நிச்சயம் அந்த டிரைவர் வேலை போய்டும். தேவையில்லாத இவங்க போட்டில passenger எல்லாம் puncher ஆனதுதான் மிச்சம். சொந்த ஊருக்கு போறவங்களுக்கு பஸ் லேட்னு இவங்களால ஏகப்பட்ட பிரச்சனை. MTC நிர்வாகம் இந்த டிரைவர்கள் பண்ற அக்கப்போர கண்டிக்குமா? அவங்க சொந்த வண்டியா இருந்தா இந்த மாதிரிதான் ஓட்டுவன்களா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக