சனி, 7 ஏப்ரல், 2012

பிரம்மாண்ட வெற்றிப்பட தயாரிப்பாளர் அவர்கள்!!!


"பிரம்மாண்ட வெற்றிப்பட தயாரிப்பாளர் அவர்கள்!!!" இந்த வாக்கியத்தை வாராவாரம் எங்கோ கேட்ருபீங்க.. அது வேற யாரும் இல்லீங்க நம்ம உதயநிதி ஸ்டாலின் தான் அவரு.கலைஞர் டிவில படவரிசை 10னு ஒரு அட்டுப்ளாப் நிகழ்ச்சி அதுல ஒரு மொக்க பீஸ் இப்படித்தான் அந்த அப்பாடக்கர் தயாரிப்பாளர(?) சொல்லி அவர் படம் முதல் இடத்துல இருக்குறதா(!!) சொல்லும். நான் பொதுவா கலைஞர் டிவி அவ்வளவா பாக்க மாட்டேன். இப்போ சட்ட மன்ற தேர்தல்ல அவங்க தோத்த பிறகு அவங்க டிவிய சுத்தமா பாக்குரதில்ல. என்ன காரணம்னா அவங்க செய்திய ஒரு முறை பாருங்க தமிழகத்தில் இவங்க ஆட்சியில ஏதோ தங்க மழை பொலிஞ்சி, அதிக மின்சாரம் உற்பத்தி செஞ்சி அத ஆப்ரிக்காவுக்கு அனுப்சி அதுல செம்மொழி மாநாட்ட செட்டு போடாம சொந்த கட்டடத்தில் நடத்துன மாதிரி சீன் போட்ராங்க. சரி விஷயத்துக்கு வருவோம் நான் பார்த்தவரை படவரிசை 10ல அவங்க குடும்பம் தயாரிச்ச படம் சொல்லி அடுத்தவங்கள மிரட்டி ரிலீஸ் பண்ண படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்;அந்த படங்கள் எல்லாம் சுமார் ஆறு ஏழு மாசத்துக்கு முதல் எடத்துல இருக்கும்.தமிழனின் பெருமைய சொல்லி ரசிகப்பெருமக்களின் பொறுமைய சோதிச்ச 7ஆம் அறிவு நூறு நாளுக்கு மேலா முதல் இடத்துல அரங்கு நிறைந்த கட்சிகளா ஓடுறதா சொன்னாங்க (எனக்கு தெரிஞ்சு சுத்துப்பட்டு பதினெட்டு பட்டில இந்த theaterலையும் பகல் காட்சி கூட அந்த படம் போடல) .


இவங்க தயாரிச்ச படத்துக்கே இப்படின்னா கலைத் தாயின் ஒன்னு விட்ட பையனோட பேரன்! வெற்றிப்பட தயாரிப்பாளர்!! வருங்கால தமிழகம்!!! உதயநிதி அவர்கள் நடித்த OKOK படம் வெளிவந்த பிறகு அதை அவங்க டிவில எப்படி விளம்பரப்படுத்துவாங்கன்னு நானே கற்பனை பண்ணி எழுதுறேன்.
படம் வெளிவந்த ஒரு நாலு நாளில் OKOK படக்குழுவினர் உடன் ஒரு சந்திப்புனு ஒரு நிகழ்சிய போட்டு அது ஒலக மகா இயக்குனர்கள் என அறியப்படும் james cameron,spilebergஐ தங்களிடம் பிச்சை எடுக்க வய்த்த திரு.மிஸ்கின், திரு.விஜய்,திரு.முருகதாஸ்,திரு.சேரன் என தானே சிந்தித்து படம் எடுக்கும் சிகரங்களை வச்சு அந்த நிகழ்ச்சிய நடத்துவாங்க. அந்த நிகழ்ச்சியின் நடுவுல james cameron போன்ல "I never seen this type of movie;what a performance by Mr.udhiyanidhi"னு பேசுவார். கடைசில எல்லா இயக்குனர்களும் சேர்ந்து "தமிழ் சினிமாவின் தடத்தை மாற்றிய படம்"னு சொல்லுவாங்க. அப்பறம் மானாட மயிலாட, நாளைய இயக்குனர்னு NON-STOP NONSENSEஆ போய்கிட்டு இருக்கும். மேலும் இசைஅருவி வேற தனியாவர்த்தனம் செய்ய ஆரம்பிக்கும். நடுவுல இவங்க படத்தோட clippings விளம்பரம்னு சொல்லி theaterஅ விட்டு பயந்து ஓடும் மக்களின் அவல நிலைனு கச்சேரி களைகட்டும் . அப்புறம் என்ன படவரிசை பத்துல சுமார் 467 நாளுக்கு அந்த படம் அரங்கு நிறைந்த காட்சிகளா ஓடும்; ஆனா நீங்க எந்த theaterல ஓடுதுன்னு கேட்ட்ககூடாது. அடுத்தாப்ல அந்தப் படமே இந்த வருடத்தின் சிறந்த படமா அடுத்த வருடம் தேர்வு செய்யப்படும்;இசையருவில சென்ற வருடத்தின் சிறந்த பாடல்னு அடுத்த வருடம் அவார்டு தருவாங்க. சிறந்த புதுமுக நாயகன்,சிறந்த படம், சிறந்த எதிர்கால நட்சதிரம்னு பல அவார்டு மீன்மார்க்கெட் கருவாடு மாதிரி காத்திருக்கு; நாம எல்லாம் அவங்க அவார்டு வாங்குரத வெறிக்க வெறிக்க பாத்துகிட்டுபோக வேண்டியதுதான்...


பின்குறிப்பு:


இந்த படம் ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்து என்னை கடுப்பகேளப்புன ஒரே விஷயம் "வெள்ளைத் தோல் ஹன்சிகாவுக்கு வில்லாங்கு மீனுக்கு கோர்ட் போட்ட மாதிரி ஒருத்தன் ஹீரோவா?" ஆ நினைக்கும் போதே நெஞ்சு எரிகிறதே இதை நான் எப்படி பொறுக்கப்போகிறேன். எத்தன ஆயிரத்துக்கு நான் gelusils வாங்கப்போறேனோ தெரியல?

கருத்துகள் இல்லை: