இந்த வருடம்(2012) உலகம் உற்றுநோக்கிய மனிதர்கள் :
ஜூலியன் அஸ்ஸான்ஜே (julian Assange) - விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் பல அரசாங்கங்களின் முக்கிய ஆவணங்களை வெளியிட்டார் .
பாரக் ஒபாமா - 2ஆம் முறை அமெரிக்க அதிபரானார் .
ஆங் சான் ஸூ கி -மயான்மர் அரசால் நீண்ட வருட சிறை வாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்பட்டார் .
லிபிய நாட்டின் அதிபர் கடாபி உள்நாட்டு போராளிக் குழுவினரால் கொலை செய்யப்பட்டார்.
எகிப்து நாட்டின் அதிபர் முபாரக் மக்கள் போராட்டத்தால் வீழ்த்தப்பட்டார் .
மன்மோகன்சிங் - பிரபல டைம்ஸ் இதழ் இவரை செயல்பட இயலாதவர் என விமர்சித்தது .
மாயன் இனத்தார் - இவர்கள் நாட்காட்டி இந்த வருடத்துடன் முடிவதால் உலகம் அழியும் என்ற பீதி இவர்களின் வாழ்வியல் முறை , பண்பாட்டை உலகறியச் செய்தது .
சச்சின் டெண்டுல்கர் - டெஸ்ட் போட்டியில் 50வது சதம் கடந்தார். மேலும் தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.
அண்ணா ஹசாரே மற்றும் அவரின் குழு - உழலுக்கு எதிரான இயக்கம் என்ற ஒன்றை தொடங்கி தனது உண்ணா விரத போராட்டத்தால் மக்களிடம் எவ்வளவு விரைவில் செல்வாக்கு பெற்றனரோ அதே வேகத்தில் அவர்களின் வீழ்ச்சி இருந்தது .
திங்கள், 24 டிசம்பர், 2012
சனி, 22 செப்டம்பர், 2012
சனி, 15 செப்டம்பர், 2012
ஞாயிறு, 8 ஏப்ரல், 2012
சத்துணவும் டீச்சர் முட்டையும்...
சத்துணவும் டீச்சர் முட்டையும்... :
நான் எங்க ஊரு பள்ளியில 8வது படிக்கும் வரை மதியம் சத்துணவு சாப்பிட்டேன். என்னோட சேர்ந்து என்னோட நண்பர்களும் சாப்பிடுவாங்க. எங்க பள்ளில நிறைய வேப்பமரம் இருக்கு. எண்ணிக்கைல பார்த்தா 200க்கு மேல இருக்கும். நாங்க எல்லாம் ஒரு கும்பலா ஏதாவது ஒரு வேப்பமரத்த சுத்தி உட்காந்து சாப்பிடுவோம். அந்த மாதிரி ஒரு நாள் சாப்டுகிட்டு இருந்தோம். அன்னைக்கு காலைல தான் மாத பரிட்சையோட விடைத்தாள் கொடுத்திருந்தாங்க. என்னோட ஒரு நண்பன் பெயர் மாரிமுத்து; படிப்பு அவனுக்கு நல்லா வராது. எல்லா பாடத்திலும் பெயில் ஆயின்ருந்தான்;ஆங்கிலத்துல அவன் மார்க் பத்து, ஆனா அவன் வகுப்புல சத்தமா பேசிக்கிட்டு இருந்ததால சுத்தமா பூஜ்யம் மார்க்னு போட்டுட்டாங்க எங்க ஆசிரியை. நாங்க சாப்டுகிட்டு இருந்த போது எங்க வகுப்பு ஆசிரியர் அங்க வந்தார். மாரிமுத்துவோட சாப்பாட்டு தட்ட பார்த்தார் அவன் தட்டுல ஒன்னுக்கு மூனு முட்டை இருந்தது. அவன் பக்கத்துல இருந்த ரெண்டு பசங்க முட்டைய வாங்கி வச்சிருந்தான். அதுனால எங்க சார் அவன பார்த்து ""முட்டை யார் போட்டாங்க? "ன்னு கேட்டார்.
மாரிமுத்து கேள்விய தப்பா புரிஞ்சிக்கிட்டு ஆங்கில பாடத்துல ஆசிரியை போட்ட முட்டைதான் கேட்குரார்னு நெனச்சிக்கிட்டு "இங்கிலீஷ் டீச்சர் தான் போட்டாங்க"னு சொல்லிட்டான். "அவங்க முட்டைய நீ ஏன்டா நீ வாங்குன?"ன்னு அவர் கேட்டக அப்புறம் தான் அவருக்கு புரிஞ்சது விஷயம். அதுக்கப்புறம் என்ன ஒரே சிரிப்பு தான் எல்லோருக்கும். அன்னைக்கு தான் அவன் பள்ளி முழுதும் பிரபலம் ஆயிட்டான்.
அண்மையில் ஊருக்கு போயிருந்தேன் பல நன்பர்கள பார்த்தேன். சிலர் பொறியியல் கல்லூரி, சிலர் பாலிடெக்னிக், சிலர் பஞ்சுஆலை, சிலர் என்ன ஆனான்னு தெரியல ; அதுல ஒருத்தன் மாரிமுத்து . ஆனா அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்..
சனி, 7 ஏப்ரல், 2012
பிரம்மாண்ட வெற்றிப்பட தயாரிப்பாளர் அவர்கள்!!!
"பிரம்மாண்ட வெற்றிப்பட தயாரிப்பாளர் அவர்கள்!!!" இந்த வாக்கியத்தை வாராவாரம் எங்கோ கேட்ருபீங்க.. அது வேற யாரும் இல்லீங்க நம்ம உதயநிதி ஸ்டாலின் தான் அவரு.கலைஞர் டிவில படவரிசை 10னு ஒரு அட்டுப்ளாப் நிகழ்ச்சி அதுல ஒரு மொக்க பீஸ் இப்படித்தான் அந்த அப்பாடக்கர் தயாரிப்பாளர(?) சொல்லி அவர் படம் முதல் இடத்துல இருக்குறதா(!!) சொல்லும். நான் பொதுவா கலைஞர் டிவி அவ்வளவா பாக்க மாட்டேன். இப்போ சட்ட மன்ற தேர்தல்ல அவங்க தோத்த பிறகு அவங்க டிவிய சுத்தமா பாக்குரதில்ல. என்ன காரணம்னா அவங்க செய்திய ஒரு முறை பாருங்க தமிழகத்தில் இவங்க ஆட்சியில ஏதோ தங்க மழை பொலிஞ்சி, அதிக மின்சாரம் உற்பத்தி செஞ்சி அத ஆப்ரிக்காவுக்கு அனுப்சி அதுல செம்மொழி மாநாட்ட செட்டு போடாம சொந்த கட்டடத்தில் நடத்துன மாதிரி சீன் போட்ராங்க. சரி விஷயத்துக்கு வருவோம் நான் பார்த்தவரை படவரிசை 10ல அவங்க குடும்பம் தயாரிச்ச படம் சொல்லி அடுத்தவங்கள மிரட்டி ரிலீஸ் பண்ண படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்;அந்த படங்கள் எல்லாம் சுமார் ஆறு ஏழு மாசத்துக்கு முதல் எடத்துல இருக்கும்.தமிழனின் பெருமைய சொல்லி ரசிகப்பெருமக்களின் பொறுமைய சோதிச்ச 7ஆம் அறிவு நூறு நாளுக்கு மேலா முதல் இடத்துல அரங்கு நிறைந்த கட்சிகளா ஓடுறதா சொன்னாங்க (எனக்கு தெரிஞ்சு சுத்துப்பட்டு பதினெட்டு பட்டில இந்த theaterலையும் பகல் காட்சி கூட அந்த படம் போடல) .
இவங்க தயாரிச்ச படத்துக்கே இப்படின்னா கலைத் தாயின் ஒன்னு விட்ட பையனோட பேரன்! வெற்றிப்பட தயாரிப்பாளர்!! வருங்கால தமிழகம்!!! உதயநிதி அவர்கள் நடித்த OKOK படம் வெளிவந்த பிறகு அதை அவங்க டிவில எப்படி விளம்பரப்படுத்துவாங்கன்னு நானே கற்பனை பண்ணி எழுதுறேன்.
படம் வெளிவந்த ஒரு நாலு நாளில் OKOK படக்குழுவினர் உடன் ஒரு சந்திப்புனு ஒரு நிகழ்சிய போட்டு அது ஒலக மகா இயக்குனர்கள் என அறியப்படும் james cameron,spilebergஐ தங்களிடம் பிச்சை எடுக்க வய்த்த திரு.மிஸ்கின், திரு.விஜய்,திரு.முருகதாஸ்,திரு.சேரன் என தானே சிந்தித்து படம் எடுக்கும் சிகரங்களை வச்சு அந்த நிகழ்ச்சிய நடத்துவாங்க. அந்த நிகழ்ச்சியின் நடுவுல james cameron போன்ல "I never seen this type of movie;what a performance by Mr.udhiyanidhi"னு பேசுவார். கடைசில எல்லா இயக்குனர்களும் சேர்ந்து "தமிழ் சினிமாவின் தடத்தை மாற்றிய படம்"னு சொல்லுவாங்க. அப்பறம் மானாட மயிலாட, நாளைய இயக்குனர்னு NON-STOP NONSENSEஆ போய்கிட்டு இருக்கும். மேலும் இசைஅருவி வேற தனியாவர்த்தனம் செய்ய ஆரம்பிக்கும். நடுவுல இவங்க படத்தோட clippings விளம்பரம்னு சொல்லி theaterஅ விட்டு பயந்து ஓடும் மக்களின் அவல நிலைனு கச்சேரி களைகட்டும் . அப்புறம் என்ன படவரிசை பத்துல சுமார் 467 நாளுக்கு அந்த படம் அரங்கு நிறைந்த காட்சிகளா ஓடும்; ஆனா நீங்க எந்த theaterல ஓடுதுன்னு கேட்ட்ககூடாது. அடுத்தாப்ல அந்தப் படமே இந்த வருடத்தின் சிறந்த படமா அடுத்த வருடம் தேர்வு செய்யப்படும்;இசையருவில சென்ற வருடத்தின் சிறந்த பாடல்னு அடுத்த வருடம் அவார்டு தருவாங்க. சிறந்த புதுமுக நாயகன்,சிறந்த படம், சிறந்த எதிர்கால நட்சதிரம்னு பல அவார்டு மீன்மார்க்கெட் கருவாடு மாதிரி காத்திருக்கு; நாம எல்லாம் அவங்க அவார்டு வாங்குரத வெறிக்க வெறிக்க பாத்துகிட்டுபோக வேண்டியதுதான்...
பின்குறிப்பு:
இந்த படம் ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்து என்னை கடுப்பகேளப்புன ஒரே விஷயம் "வெள்ளைத் தோல் ஹன்சிகாவுக்கு வில்லாங்கு மீனுக்கு கோர்ட் போட்ட மாதிரி ஒருத்தன் ஹீரோவா?" ஆ நினைக்கும் போதே நெஞ்சு எரிகிறதே இதை நான் எப்படி பொறுக்கப்போகிறேன். எத்தன ஆயிரத்துக்கு நான் gelusils வாங்கப்போறேனோ தெரியல?
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
மாநகர பேருந்து ஒட்டுனர்க்கும் ,தனியார் வாகன ஒட்டுனர்க்கும் இடையே நடந்த நீயா ?நானா? போட்டி
நேற்று இரவு என்னடைய வேலையை முடித்துக்கொண்டு 6.30 மணியளவில் காசி theater நிறுத்தத்தில் கோயம்பேடு செல்லும் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தேன். சில நிமிடங்கள் காத்திருப்புக்குப்பின் வந்த c70பேருந்தில் ஏறினேன். பச்சை போர்டு பேருந்து அது. உதயம் வரைக்கு நல்லாதான் போச்சு. அப்புறம்தான் ஆரம்பிச்சது அந்த மொக்க சீன். என்னன்னா அசோக் பில்லர் to வடபழனி signal வரைக்கு செம ட்ராபிக் பஸ் டிரைவர் பின்னாடி வந்த ஒரு தனியார் கம்பனி tempo traveller வண்டிய ஓரம் கட்றமாதிரி ஒட்னாறு. அவளோ தான் அந்த டிரைவர்க்கு வந்தது ஒரு கோபம் பாருங்க யாரு யார ஓரங்ககட்டுரதுனு ஒரு போட்டியே அந்த ட்ராபிக்ல நடந்தது. ரெண்டு பெரும் ஒருத்தனுக்கு ஒருத்தன் ஆங்கிலத்துல அவனுங்க ஏழு ஜென்மம் வரை இழுத்து திட்டிகிட்டானுங்க. வடபழனி சிக்னல் வரை இவங்க அக்கப்போர் தாங்கமுடியல.
எரியிற தீல எம்பது லிட்டர் பெட்ரோல் ஊத்துற மாதிரி பஸ்ல தொங்கிட்டு வந்த பசங்க வேற பஸ் டிரைவர துண்டிவிட சார் கியர் பாக்ஸ் மேல நயன்தாரா வந்து உக்காந்த மாதிரி ஓட்ட பஸ்ல இருந்த எல்லோரும் "ஏம்பா அவனோட உக்கு இந்த போட்டி பேசாம மெதுவாவே போப்பானு கத்த" ஒரே ரணகளம். கடைசில வடபழனி சிக்னல் கிட்ட tempo traveller ஓடிக்கிட்டு வந்த அந்த super hero நம்ம தல பஸ்ஸ அனச்சிவிட்டான். பஸ்சுக்கு ரைட் சைட்ல அந்த மெட்ரோ ரயில் தடுப்பு இந்தப்பக்கம் அந்த super hero வண்டி, பின்னாடி செம ட்ராபிக் பாபா படத்துல கடைசில ரஜினி எந்த பக்கம் போவார்னு மக்கள் எதிர்பாக்க அவர் கரெக்டா தப்பான சைடு போவார் அதே மாதிரி நம்ம டிரைவரும் போட்டார் ஒரு கியர் மிதிச்சார் அந்த அச்செலறேடர்அ அவளோதான் அந்த super hero வண்டியோட ஒரு சைடு நல்ல அடி பஸ்சுக்கு சைடு மிரர் அவுட் . நாங்களும் செம மூட் அவுட். அப்புறம் என்ன ரெண்டு super heroகும் செம அர்ச்சனை. போலீஸ் வந்தது ரெண்டு வண்டியும் ஓரமா போட்டு எங்கள சைடுல போட்டு அப்புறம் வேற பஸ்ஸ பிடிச்சி வீடு வந்து சேர்ந்தேன். உண்மைய சொல்லனும்னா அந்த பஸ் டிரைவர் மேலதான் தப்பு. சரி அந்த பஸ் டிரைவர் எப்படியோ தப்பிசிருவாறு ஆனா அந்த tempo traveller டிரைவர் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். இந்த மாதிரி வண்டி சேதாரம் ஆச்சின்னா நிச்சயம் அந்த டிரைவர் வேலை போய்டும். தேவையில்லாத இவங்க போட்டில passenger எல்லாம் puncher ஆனதுதான் மிச்சம். சொந்த ஊருக்கு போறவங்களுக்கு பஸ் லேட்னு இவங்களால ஏகப்பட்ட பிரச்சனை. MTC நிர்வாகம் இந்த டிரைவர்கள் பண்ற அக்கப்போர கண்டிக்குமா? அவங்க சொந்த வண்டியா இருந்தா இந்த மாதிரிதான் ஓட்டுவன்களா?
திங்கள், 2 ஏப்ரல், 2012
மழையின் ஓசை கேட்க ஆசையா?
மழை நம் அனைவருக்கும் படித்த ஒன்று . இந்த இணைய தளத்தில் மழையின் ஓசை மிகத் துல்லியமாய் கேட்கிறது. இதன் ஓசை மனத்திற்குள் ஒரு அமைதியையும் ஏற்படுத்துகிறது. இதை கேட்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
RainyMood.com: Rain makes everything better.
RainyMood.com: Rain makes everything better.
சனி, 24 மார்ச், 2012
பாப்பா பாட்டு பாரதி பாடக் காரணம்?
ஓடி விளையாடு பாப்பா' என்றபாட்டை பாடியவர் யார் என்றால் "பாரதியார்' என்று பட்டென பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால், அந்தப் பாட்டு பாரதியாரின் கற்பனையில் பிறக்க காரணமான "பாப்பா' யார் தெரியுமா? தொடருங்க!
பாரதியாரின் இரண்டாவது மகள் சகுந்தலா, ஒருநாள் அழுது கொண்டிருந்தாள். அவளை விசாரித்த போது, ""அம்மா திட்டினாள்,'' என்றாள். பாரதியார் தன் மனைவி செல்லம்மாளைக் கடிந்து கொண்டார்.
""குழந்தையை ஏன் திட்டுகிறாய்?'' என்றார்.
""உங்களுக்கென்ன! காலை முதல் மாலை வரை ஏதாவது எழுதுவதே உங்களுக்கு வேலையாகி விட்டது. நானல்லவா இவளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது! உங்கள் செல்லமகள் செய்யும் திருவிளையாடல்கள் உங்களுக்கெங்கே தெரியப் போகிறது! பக்கத்து வீடுகளுக்கு ஓடுகிறாள். அங்கே குழந்தைகளுடன் சண்டை வருகிறது. யாராவது அடித்து விட்டால் அடி வாங்கி வந்து இங்கே
உட்கார்ந்து அழுகிறாள். இவளைச் சமாதானம் செய்வதே எனக்கு பிழைப்பாகி விட்டது. "இனி வெளியே போகாதே, ஒழுங்காக வீட்டில் இரு' எனக் கண்டித்தேன். அதற்காக உட்கார்ந்து அழுகிறாள்,'' என்றார் சலிப்புடன்.
பாரதியார் சிரித்தபடியே மகளை அணைத்துக் கொண்டார்.
""சகுந்தலா! நான் உனக்கு ஒரு பாட்டு கற்றுத் தருகிறேன். அதைப் பாடிக்கொண்டே இரு, பொழுது பயனுள்ளதாகக் கழியும்,'' என்றார்.
அவரது வாயிலிருந்து பாப்பா பாட்டு மழையாய் பொழிந்தது.
""ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா'' என்று.
இப்படியாக, பாப்பா பாட்டு பிறக்க காரணமாக இருந்தது,நம் முண்டாசுக் கவிஞனின் செல்லத் திருமகள் தான்!
வியாழன், 22 மார்ச், 2012
செவ்வாய், 20 மார்ச், 2012
சனி, 17 மார்ச், 2012
why do we use Lemon for pooja? | இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?
வெள்ளி, 16 மார்ச், 2012
Temple News | News | Dinamalar Temple | உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?
புதன், 7 மார்ச், 2012
கல்லூரியில் எனது முதல் நாள் அனுபவம்!
என் முதல் நாள் கல்லூரி அனுபவம் :
நான் வைஷ்ணவ கல்லூரியில் தான் தற்போது படித்துவருகிறேன் . இது என் 2வது வருடம் நான் அரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்தவன். ஆனால் நான் சேர்ந்த புதிதில் எனது கல்லூரியில் பேராசிரியர்கள் திட்டுவது மட்டும்தான் தமிழில் மீதம் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் என தெரிந்து கொண்டேன். ஆதலால், கல்லூரியில் முதல் நாள் என்னை பற்றி சுய அறிமுகம் செய்துகொள்ள ஆங்கிலத்தில் பேச நான் கற்றுக்கொண்டேன். மேலும் பகிடிவதை சித்தரவதையெல்லாம் கல்லூரில் உண்டு என நினைத்து பயந்துகொண்டே கல்லூரிக்கு சென்றேன்.
அனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருந்தது. சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றனர். இதை பார்த்த எனக்கு ஒருவித உற்சாகம் மனதில் ஏற்பட்டது. இருந்தும் எனது வகுப்பு மற்றும் சக மாணவர்கள் , மாணவிகள் பற்றிய எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாதவனாய் என் வகுப்பைக் கண்டுபிடித்து அதில் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அடுத்த என் எண்ணம் "நாம் மட்டும் தான் தமிழ் வழிக் பயின்றவனா இல்லை வேறு யாரேனும் தமிழ் வழி பயின்ற மாணவர்கள் உள்ளனரா?" என என் கண்கள் தேட ஆரம்பபித்தது. என் வகுப்பில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 50 . அதில் என்னைத்தவிர ஒருவன் மட்டும் தமிழ் வழிக் கல்வி பயின்றவன் மட்டுமே இருந்தான். அனைவரின் உடையும்,காலணிகளும் என்னை உடையையும்,செருப்பையும் விட தரத்திலும்,விலையிலும் உயர்வாகவே இருந்தது. என் குடும்ப நிலையை ஒத்த மாணவர்கள் 5 பேர் என்னுடன் படித்துக்கொண்டு உள்ளனர்.
அடுத்ததாக என் ஆசிரியர்கள் பற்றியும் எனது பாட திட்டங்கள் பற்றியும் நினைத்தவாறு இருந்தேன். குறிப்பாக நான் எனது ஆங்கில ஆசிரியர் பற்றி எனக்கு ஒன்றை நானே உருவகம் செய்துகொண்டேன். நான் நினைத்தது போல ஆங்கில ஆசிரியை அவர்கள் இருந்தார். அவர் முதலில் தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டார். பின்பு மாணவர்கள் ஒவ்வொருவரையும் தங்களை பற்றி கூறுமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாறே எங்களின் அறிமுகம் முடிந்தது. அதன் பின்பு கணித ஆசிரியர், c language, தமிழ் ஆசிரியர் என வரிசையாக எங்கள் ஆசிரியர்கள் அனைவரையும் கண்டோம். அதில் எனக்கு தமிழ் ஆசிரியர் அவர்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
கொஞ்சம் மன இறுக்கம், கொஞ்சம் பயம், கொஞ்சம் உற்சாகம் என என் முதல் நாள் கல்லூரி நாள் கழிந்தது.

உண்மையான கடவுளும் மனிதனும்!
கடவுளும் மனிதனும்! இதை நான் எழுதக் காரணம் கடவுளால் நாமும் , நம்மால் கடவுளும் பரஸ்பரம் பாதிக்கப்பட்டுளோம். ஒரு வேளை அவர் கூகுளில் கணக்கு வைத்திருந்தால், நமக்கு முன்னரே அவர் எழுதி இருக்கலாம் என நினைக்கிறன்.
நான் சிறு வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவன். பெண் பிள்ளைகள் போன்று வாராவாரம் செவ்வாய்,வெள்ளி என எனது ஊரில் உள்ள அன்னை சாரதாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபடுவேன். மேலும், பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலிலும் சென்று தரிசனம் செய்வேன். நான் 7ஆம் வகுப்பு வரை எனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை நகரத்துக்கு அருகில் உள்ள ராமலிங்க நகர் தான். தினசரி காலை பள்ளிக்கு செல்லும் முன்னர் எனது வீட்டில் கடவுளை வணங்கிவிட்டு தான் புறப்படுவேன். வெகு ஜென மக்கள் என்னவெல்லாம் இறைவனிடம் வேண்டுவர்களோ அதைத்தான் நானும் வேண்டுவேன்.அப்பொழுது என்னக்கு தெரியாது இறைவன் பாவப்பட்ட ஜென்மம் என்பது. பொதுவாக நான் எப்போதும் சாமி கும்பிடும் பொது அவரிடம் வேண்டுவது "சாமி எனக்கு நல்ல கல்வி செல்வத்தை கொடு,என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடு" என வேண்டுவேன். இது முடிந்தபின்னர் நவ கிரகங்கள் என அழைக்கப்படும் ஒன்பது நல்லவர்களையும் வேண்டுவேன். அதில் அந்த சனி பகவனை பற்றி கேள்விப்பட்டுள்ளேன் அவர் யாரையும் தொடக்குடதாம். அப்படி தொட்டால் பெரிய துன்பங்கள் எல்லாம் ஏற்படுமாம். அதனால் சனி பகவான் மீது மட்டும் ஒரு வித பயம் இருக்கும்.
எனது வேண்டுதல் எல்லாம் பலித்ததா என்று கூட எனக்கு திறனாய்வு செய்யும் அளவுக்கு எனக்கு அப்போது விவரம் இல்லை. ஆனால் இப்போது எனது வேண்டுதலை நினைத்து பார்க்கும் போது இறைவனின் கஷ்டம் புரிகிறது.நம் அனைவரும் அறிந்ததே இன்று உலக மக்கள் தொகையின் எண்ணிக்கையும் , அதில் நமது நாட்டின் பங்களிப்பையும். இந்த விஞ்ஞான உலகில் சில மக்கள் இறைவன் இல்லை என்கின்றனர், ஆனால் அவ்வாறு சொல்பவர்களின் பெற்றோரோ "கடவுளே என் பிள்ளையைய் எப்படியாவது திருத்து" என பிள்ளை நம்பாத கடவுளிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைக்கும் படி வேண்டுகின்றனர்.
நம்மில் அநேகர் இறைவனிடம் தனக்கானத்தைத் தான் வேண்டுகின்றனர். உண்மையில் இது தவறில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.இத்தனை காலம் கடவுள் நம் அனைவரின் வேண்டுதலை கேட்டுக்கேட்டு விரக்தி அடைந்து இருக்கவேண்டும்."என்னடா இந்த மனிதர்கள் ஒன்று நம்மிடம் அதைக்குடு ,இதைக்குடு என தொல்லை செய்கின்றனர் இன்னொருபக்கம் கடவுளே இல்லை என நம்மையே திட்டுகின்றனர்" என வருந்தி இருப்பார்.எனவே தான் இப்போது அவர் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்துவிட்டார் போலும். (கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் அல்லவா?)ஆனால் இந்த இடத்தில் கடவுள் மனிதனாய் மாறிவிடுகிறார்.
நான் இப்போதெல்லாம் கடவுளிடம் ,"இந்த நாள் நன்றாக இருக்க வேண்டும் " என மட்டுமே வேண்டுகிறேன்.கடவுள் பற்றி நாம் பேசும்போதெல்லாம் நாம் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?இல்லையா? என விவாதிக்க தயங்குவதில்லை.
நான் இங்கு ஒரு சிறுகதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .
அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்
வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.
அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .
உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"
இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்
" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .
சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்
ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்
மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்
திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவு கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்
" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது
எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "
அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது
அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது
உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"

இது காலம் சென்ற தமிழ் ஆர்வலர் தென்கச்சிக் கோ. சுவாமிநாதன் அவர்கள் எழுதிய சிறுகதை ஆகும்.
பண்டைய காலத்தில் நம் முன்னோர் கடவுளை ஒரு கருவியாக பயன்படுத்தி இருக்கவேண்டும். ஏனெனில், மக்கள் அக்காலத்தில் இறைவனுக்கு அஞ்சினர். எனவே அடிப்படை சமூக நெறிகள் காக்க இறைவன் என்ற அடையாளம் தெரியாதவர் பயன்பட்டிருப்பார். உதாரணமாக மேற்கண்ட கதையில் எப்படி இறைவன் தியானம் செய்ய ஒரு கர்வியை பயன்படுகிரானோ அது போல நம் அன்றாட வாழ்வியல் செயல்களில் அவன் நமக்காக பிறருக்கும் , பிறருக்காக நமக்கும் பயன்படுகிறான்.
வேறு சிலரோ மனிதன் என்ற கோணத்தில் தன்னை பிறரிடம் காண்கிறான் . அதனால் பிறரின் துன்பத்தை தன்னுடைய துன்பமாக எண்ணுகிறான், துடிக்கிறான், உதவுகிறான். அவனே மற்றோர் பார்வையில் இறைவனாகிறான். இங்கு ஒரு மனிதன் இறைவன் நிலையை அடைகிறான்.நானும் இறைவனாக விரும்புகிறேன். நீங்கள் கடவுளைபோன்ற மனிதனாக வாழ்வீர்களா? அல்லது மனிதனைப் போன்ற கடவுளாக வாழ்வீர்களா?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)